கீரையில் வைட்டமின் சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது . வல்லக் கீரை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.இது அரிதாக கிடைக்கும் கீரை அகும். பல சந்தைகளில் இது கிடைக்காது .
To Read This Recipe In English, Click Here
தேவையான பொருட்கள்
- வல்லக் கீரை - 2 கட்டு
- சின்ன வெங்காயம் - 8
- மிளகாய் வற்றல் - 2
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
To Read This Recipe In English, Click Here
செய்முறை
- வல்லக் கீரையின் இலைகளை தனியாக பிரித்தெடுக்கவும்.
- கீரையை நன்றாக அலசி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
- கடுகை சேர்க்கவும்.
- உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
- பின் நறுக்குகிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- மிளகாய் வற்றலை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
- கடைசியாக நறுக்கிய வல்லக் கீரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
- சிறிது தண்ணீரை தெளித்து சிறு தீயில் வதக்கவும்.
- (7-10) நிமிடங்கள் கழித்து தண்ணீர் நன்கு குறைந்து கீரை வெந்துருக்கும்.
- நெய் சாதம் அல்லது குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.
To Read This Recipe In English, Click Here
குறிப்பு
- இந்த செய்முறை சௌராஷ்ட்ரா மக்களின் கீரை சமைக்கும் ஸ்டைல் ஆகும்.
- விருப்பப்பட்டால் துருவிய தேங்காயை கடைசியில் சேர்த்து கொள்ளலாம்.
- சீரகத்தை கடுகுடனோ அல்லது கடுகிற்கு பதிலாகவோ தாளிக்கும் போது சேர்த்து கொள்ளலாம்.
- சின்ன வெங்காயம் நிறைய சேர்த்தால் கீரையின் சுவை மேலும் கூடும்.
- சின்ன வெங்காயம் இல்லையென்றால் பெரிய வெங்காயம் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment