Wednesday 19 July 2017

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ரெசிபி



    பிரியாணிக்கும் மற்றும் தென் இந்தியாவிற்கும் பரஸ்பர தொடர்பு உண்டு. பிரியனியின் மீது இருக்கும் மோகம் எப்பொழுதும் குறையாமல் இருக்கிறது. திண்டுக்கல் தலப்பாக்கட்டி பாணி பிரியாணி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதன் சுவை தனித்துவமாக இருக்கின்றது. சீராக சம்பா அரிசி இதற்க்கு மேலும் சுவையை கூட்டுகிறது.

    இந்த ரெசிபி இங்கே இருந்து கிடைத்தது . திண்டுக்கல் தலாபகட்டி ஹோட்டலின் செஃப் நாகேந்திரன் ஒரு இதழில் இதன் செய்முறையை விளக்கியுள்ளார். அதே மாதிரி அந்த பிளாக்கர் செய்து இருக்கிறர்.
     

       

    தேவையான பொருட்கள்


    1. ஜீரக சம்பா அரிசி/பிரியாணி அரிசி  - 1 1/2 கப்  
    2. கோழி/சிக்கன் - 500 கிராம்    
    3. சின்ன வெங்காயம் - 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன் (35 கிராம்)
    4. பூண்டு - 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன் (35 கிராம்)
    5. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    6. தயிர் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன் 
    7. உப்பு - சுவைக்கு ஏற்ப 
    8. புதினா இலைகள் - 1/2 கப் அல்லது ஒரு கை அளவு 
    9. கொத்தமல்லி இலைகள் - 1/2 கப் அல்லது இரு கை அளவு 
    10. எலுமிச்சை சாறு - அரை எலுமிச்சை பழத்திலிருந்து பிழிந்த சாறு
    11. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
    12. நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
    13. தண்ணீர் - 3 கப்

    அரைக்க 

    1. பச்சை மிளகாய் - (5-7)
    2. இலவங்கப்பட்டை - 4 அங்குல துண்டுகள்
    3. ஏலக்காய் - (3-4)
    4. இலவங்கம்/கிராம்பு - (3-4)
    5. ஜாதிக்காய் - 1/2 தேக்கரண்டி
    6. இஞ்சி - 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன் (35 கிராம்)

       

    செய்முறை 

    1. மிக்ஸியில், பூண்டை சேர்க்கவும்.
    2. பூண்டை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதனை தனியே எடுத்து வைக்கவும். 
    3. மிக்ஸியில், சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
        
    4. சின்ன வெங்காயத்தையும் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதனை தனியே எடுத்து வைக்கவும்.
    5. இப்போது மிக்ஸியில், பச்சை மிளகாய், இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும்.
    6. சிறிது தண்ணீரை சேர்த்து மைய அரைக்கவும்.
    7. அரிசியை தண்ணீரில் நன்கு அலசி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
    8. ஒரு குக்கரில் அல்லது கனமான பாத்திரத்தில் எண்ணையை காயவிடவும்.
    9. அதில் நெய் சேர்க்கவும்.
    10. இப்போது, அரைத்து வைத்த மசால் கலவையை சேர்க்கவும். சில நொடிகள் வரை வதக்கவும். 

    11. அரைத்த பூண்டை சேர்க்கவும். 
    12. அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். எண்ணெய் வெளியில் வரும் வரை வதக்கவும்.
    13. நன்கு கழுவிய கோழியை சேர்க்கவும்.
    14. சிவப்பு மிளகாய் துளை சேர்த்து கவனமாக கலக்கவும். பாத்திரத்தை முடி, 10-15 நிமிடங்கள் சிறு தீயில் சமைக்கவும். கோழியில் இருந்து தண்ணிர் வெளியில் வரும் அதனால் தண்ணீரை சேர்க்க தேவையில்லை. அடி பிடிக்காமல் இருக்க 5 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறவும்.
    15. அதனுடன் தயிர் சேர்த்து 5 நிமிடங்கள் வரை திறந்தே அதை சமைக்கவும்.
    16. கோழி கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். தோராயமாக கலவையின் அளவை கணக்கிடவும்.
    17. பாத்திரத்தில் தேவையான தண்ணீரை சேர்க்கவும். இங்கே, தோராயமாக 1/2 கப் கலவை  இருந்தது, அதனால் 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ளது.
    18. நறுக்கிய புதினா இலைகள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
    19. கோழி கலவையை சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும்.
    20. ஊறவைத்த அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும்.
    21. எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
    22. கொதி வந்தவுடன் பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரை சிறு தீயில் சமைக்கவும்.
    23. சூடான பிரியாணி தயிருடன் அல்லது குருமாவுடன் பரிமாற தயார்.

       

    குறிப்பு

    1. சுவைக்கு ஏற்ப மசாலா மற்றும் உப்பை சரி செய்யவும்.
    2. விருப்பப்பட்டால் ஜாதிபத்ரியை சேர்த்து கொள்ளலாம். ஒரிஜினல் ரெசிபியில் ஜாதிபத்ரி சேர்க்கப்பட்டுள்ளது. ஜாதிபத்ரி அந்த சமயத்தில் கிடைக்கவில்லை என்பதால் இங்கு சேர்க்கப்படவில்லை. ஜாதிபத்ரி பிரியாணியின் சுவையை கூட்டும்.
    3. கோழியை சமைக்கும் போது உப்பு சேர்க்கப்படவில்லை. எனவே கோழியில் உப்பின் சுவை இல்லை. எனவே பாதி உப்பை கோழியோடு சேர்க்கவும்.           
    4.   


      1 comment:

      1. Harrah's Cherokee Casino and Hotel - Mapyro
        Harrah's Cherokee Casino 성남 출장안마 and Hotel is located on the Qualla Boundary in 목포 출장샵 Murphy, 영천 출장마사지 North Carolina. 여수 출장샵 It is 김포 출장마사지 owned by the Eastern Band of Cherokee Indians

        ReplyDelete

      வாசகர்களின் விருப்பமான ரெசிபி

      செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

      சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...