புதினா சட்னி மிகவும் எளிமையான சட்னி இதை குறுகிய நேரத்திலே தயார்
செய்துவிடலாம். புதினாவில் அதிக சத்துகளும் நன்மைகளும் இருக்கிறது. இந்த சட்னியில் புதினா அதிகமாக சேர்க்கப்படுகின்றது எனவே இந்த சட்னி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
தேவையான பொருட்கள்
- புதினா இலைகள் - 3/4 கப்
- தக்காளி - 4
- கடலை பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் வற்றல் - 4
- கறிவேப்பிலை - 3
- கொத்தமல்லி இலை - 6
- தேங்காய் - (2-3) சில்
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - (2-3)
- கறிவேப்பிலை - 2
செய்முறை
- வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
- கடலை பருப்பை சேர்க்கவும். போன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- மிளகாய் வற்றலை கிள்ளி போடவும்.
- நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
- புதினா இலைகளை சேர்க்கவும்.
- கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
- தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
- உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை உற்றி தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- சட்னி கலவையை ஆறவிடவும்.
- மிக்ஸியில், கலவையை சட்னி பதத்திற்கு அரைக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வாணலியில் ஒரு கொதி வரவிடவும்.
தாளிப்பதற்கு
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
- தாளித்ததை சட்னியில் சேர்க்கவும்.
இட்லி, தோசை அல்லது தக்காளி சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு
- தேங்காய் இல்லாமல் கூட இந்த சட்னியை செய்யலாம்.
- விருப்பப்பட்டால், தக்காளியோடு கொஞ்சம் புளியை சேர்த்து கொள்ளலாம்.
- உப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.