Friday, 14 July 2017

வல்லக் கீரை பொரியல் ரெசிபி



    கீரையில் வைட்டமின் சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது . வல்லக் கீரை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.இது அரிதாக கிடைக்கும் கீரை அகும். பல சந்தைகளில் இது கிடைக்காது . 


    To Read This Recipe In English, Click Here


    தேவையான பொருட்கள்
    1. வல்லக் கீரை - 2 கட்டு
    2. சின்ன வெங்காயம் - 8
    3. மிளகாய் வற்றல் - 2
    4. கடுகு - 1/2 தேக்கரண்டி
    5. உளுத்தம் பருப்பு  - 1 தேக்கரண்டி
    6. உப்பு - சுவைக்கு ஏற்ப 
    7. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

    To Read This Recipe In English, Click Here


    செய்முறை 

    1. வல்லக் கீரையின் இலைகளை தனியாக பிரித்தெடுக்கவும்.
    2. கீரையை நன்றாக அலசி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
    3. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும். 
    4. கடுகை சேர்க்கவும்.
    5. உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
    6. பின் நறுக்குகிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
    7. மிளகாய் வற்றலை சேர்க்கவும்.
    8. தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
    9. கடைசியாக நறுக்கிய வல்லக் கீரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
    10. சிறிது தண்ணீரை தெளித்து சிறு தீயில் வதக்கவும்.
    11. (7-10) நிமிடங்கள் கழித்து  தண்ணீர் நன்கு குறைந்து கீரை வெந்துருக்கும்.
    12. நெய் சாதம் அல்லது குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.

    To Read This Recipe In English, Click Here

    குறிப்பு

    1. இந்த செய்முறை சௌராஷ்ட்ரா மக்களின் கீரை சமைக்கும் ஸ்டைல் ஆகும்.
    2.  விருப்பப்பட்டால் துருவிய தேங்காயை கடைசியில் சேர்த்து கொள்ளலாம். 
    3. சீரகத்தை கடுகுடனோ அல்லது கடுகிற்கு பதிலாகவோ தாளிக்கும் போது சேர்த்து கொள்ளலாம்.
    4.  சின்ன வெங்காயம் நிறைய சேர்த்தால் கீரையின் சுவை மேலும் கூடும். 
    5. சின்ன வெங்காயம் இல்லையென்றால் பெரிய வெங்காயம் பயன்படுத்தலாம். 



    Tuesday, 11 July 2017

    வேர்க்கடலை சட்னி ரெசிபி


      வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி என்பது ஒரு ஆந்திர உணவு வகை ஆகும். இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும் . இது தெலுங்கு பேசும் மக்களின் பாரம்பரிய உணவாகும். இது இட்லி, தோசை மற்றும் ஊத்தாப்பம் உடன் சிறந்த சைடு டிஷ் ஆக இருக்கும்.

      வேர்க்கடலை சட்னி பல விதங்களில் தயாரிக்கலாம். இந்த செய்முறையில் எந்த பருப்பும் பயன்படுத்தப்படவில்லை. மறுபாட்டிற்கு 'குறிப்பு' பகுதியை படிக்கவும். ஒரு முறை தயாரிக்கப்பட்டால் 2 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது. 2 மணி நேரம் கழித்து சுவை குறையக்கூடும்.

      தேவையான பொருட்கள்
      1. பச்சை கடலை/வேர்க்கடலை - 1/2 கப்
      2. சின்ன வெங்காயம் - 2
      3. பூண்டு - 2
      4. மிளகாய் வற்றல் - 2
      5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
      6. புளி - 1 தேக்கரண்டி
      7. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
      8. உப்பு - 2 தேக்கரண்டி அல்லது  சுவைக்கு ஏற்ப 
      9. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

      தாளிக்க 

      1. கடுகு - 1/2 தேக்கரண்டி
      2. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
      3. மிளகாய் வற்றல் - 4
      4. கறிவேப்பிலை - 2  

      செய்முறை 

      1. வேர்க்கடலையை வாணலியில் வறுக்கவும்.
      2. வறுத்த வேர்க்கடலையை ஆறவிடவும்.
      3. வேர்க்கடலையின் தோலை நீக்கி தனியே வைத்து கொள்ளவும்.
      4. வாணலியில் சிறிது எண்ணெய்யை காயவிடவும். அதில்,  சீரகம், வெங்காயம், பூண்டு, புளி, உப்பு, பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். 2 நிமிடங்கள் வதக்கிய பின் ஆற விடவும்.  
      5. மிக்ஸியில் வேர்கடலையோடு வதக்கிய வெங்காய கலவையை சேர்க்கவும்.
      6. சிறிது தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
      தாளிப்பதற்கு 
      1. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
      2. தாளித்ததை சட்னியோடு சேர்த்து பரிமாறவும்.

      குறிப்பு

      1. வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தாதவர்கள், உளுத்தம் பருப்பு அல்லது கடலை பருப்புபை  சிவப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையோடு சேர்த்து வதக்கி வறுத்த வேர்கடலையோடு சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.
      2. புளி சேர்க்க விருப்பம் இல்லையென்றால் அதனை தவிர்க்கலாம் அல்லது புளிக்கு பதிலாக தக்காளியை உபயோகிக்கலாம்.
      3. விருப்பப்பட்டால், வேர்க்கடலையின் தோலை நீக்காமல் கூட உபயோகிக்கலாம். அது கொஞ்சம் கசப்பாக இருக்கக்கூடும்.
      4. மாறுதலுக்கு தேங்காயை பச்சையகவோ அல்லது வெங்காயத்துடன் வதக்கியோ வேர்கடலையுடன் அரைத்துக்கொள்ளலாம்.   


      Sunday, 9 July 2017

      கிராமத்து ஸ்பெஷல் மிட்டாய் : கமர்கட்



        கமர்கட் கிராமத்தில் பிரபலமான மிட்டாய் ஆகும் . இது நகரத்திலும் கிடைக்கிறது. ஆடம்பரமான மிட்டாயின் வருகையால்  கமர்கட் உற்பத்தி  குறைந்துள்ளது. கமர்கட்டில் நிறைய சத்துகள் உள்ளது . இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது . இந்த மிட்டாயில் சக்கரை சுத்தமாக சேர்க்கவில்லை.

        இது கடினமாக இருக்கும். நம் பற்களின் வலிமைக்கு இந்த மிட்டாய் ஒரு பரிட்சையாக இருக்கும். படத்துடன் கூடிய  கமர்கட்டின் செய்முறை பின் வருமாறு. 

        To Read this Recipe in English, Click Here 

        தேவையான பொருட்கள்


        1. தேங்காய் (துருவியது ) - ½ கப்
        2. மண்டைவெல்லம் (துருவியது ) - 1 1/2 கப்
        3. ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
        4. நெய் - 2 தேக்கரண்டி

        To Read this Recipe in English, Click Here 

        செய்முறை 

        1. வாணலியில் நெய்யை சூடுபடுத்தவும்.
        2. அதில் துருவிய தேங்காயை சேர்த்து, 1-2 நிமிடம் சிறு தீயில் வறுக்கவும்.
        3. ஒரு தட்டில் வறுத்த தேங்காயை மாற்றிக்கொள்ளவும்.
        4.  அதே வாணலியில், துருவிய வெல்லத்தை சேர்க்கவும்.
        5. சிறிதளவு தண்ணீரை ஊற்றவும்.
        6. மண்டைவெல்லம் கரையும் வரை காய்ச்சவும்.
        7.  மண்டைவெல்ல கரைசலை வடிகட்டவும்.
        8.  வடிகட்டிய மண்டைவெல்ல கரைசலை மறுபடியும் வாணலியில் ஊற்றவும்.      
        9. அதனை கொதிக்கவிடவும்.
        10. மண்டைவெல்ல கரைசல் சிறிது கெட்டியானதும் வறுத்த தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
        11. ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
           
        12. கமர்கட் கலவை மேலும் கெட்டியாகும். சிறு தீயிலே சமைக்கவும் மற்றும் அடிக்கடி கலக்கவும், இல்லையெனில் அடிபிடித்துவிடும்.
        13. கலவையின் நிறம் பொன்னிறத்திலிருந்து அடர்ந்த பிரவுன் நிறத்திற்கு மாறும். 
        14. கெட்டியாகும் வரை காய்ச்சவும்.
        15.  ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். கெட்டியானதும், 1/2 ஸ்பூன் கலவையை தண்ணீரில் சேர்க்கவும். தண்ணீரோடு அது கலக்கக்கூடாது மேலும் கையால் உருட்டினால் கடினமான பந்து போல வரவேண்டும். இது தான் சரியான பதம். பந்து போல் உருட்ட முடியவில்லை என்றால் சிறிது நேரம் காய்ச்சவும். 
        16. ஒரு தட்டில் நெய் தடவிக்கொள்ளவும். கமர்கட் கலவையை தட்டில் ஊற்றவும். சிறிது ஆறியதும் நெய் தடவிய கையில் சிறு பந்துகளாக உருட்டிக்கொள்ளவும். அதிக நேரம் ஆறினால் உருட்ட முடியாது. சூடாக இருக்கும் போதே சீக்கிரமாக உருட்டிக் கொள்ளவேண்டும். 
        17. ஆறியதும் கடினமாக மாறிவிடும். கற்று புகாத டப்பாவில் அடைத்து ஒரு வாரம் வரை சுவைத்து மகிழலாம்.

        To Read this Recipe in English, Click Here 

        குறிப்பு

        1. முழு செய்முறையை சிறு தீயிலே சமைக்கவும். 
        2. தட்டில் நெய் தடவுவது முக்கியம் இல்லை என்றெல் கமர்கட் கலவை தட்டில் ஒட்டிக்கொள்ளும்.
        3. கமர்கட் கலவை சீக்கிரமாகவே கடினமாகிவிடும். 
        4. கலவையை சூடாக்கினால் சிறிது இளகிவிடும். உடனே கமர்கட்டை உருட்டிக்கொள்ளலாம். 
        5. நான் மைக்ரோவே ஓவெனில் வைக்கும் தட்டை உபயோகித்ததால் தட்டை அப்படியே ஓவெனில் வைத்து சூடுபடுத்தினேன். 
        6. கலவை மிகவும் சூடாக இருக்கும்.சூட்டை பொறுக்க கையில் நெய் தடவிக்கொள்ளவும். 

          Thursday, 6 July 2017

          துவரம் பருப்பு சட்னி

          To Read this Recipe in English, Click Here 

          தேவையான பொருட்கள்

          1. துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
          2. தக்காளி - (4-5)
          3. மிளகாய் வற்றல் - 4
          4. கறிவேப்பிலை - 2 
          5. கொத்தமல்லி இலை - 3 
          6. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி 
          7. உப்பு - சுவைக்கு ஏற்ப 
          8. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

          தாளிக்க 

          1. கடுகு - 1/2 தேக்கரண்டி
          2. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
          3. மிளகாய் வற்றல் - 4
          4. கறிவேப்பிலை - 2  

          To Read this Recipe in English, Click Here 

          செய்முறை 

          1. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
          2. எண்ணெய் சூடானதும் துவரம் பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். 
          3. மிளகாய் வற்றலை சேர்க்கவும்.
          4. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
          5. நறுக்கிய  தக்காளியை சேர்க்கவும்.
          6. கடைசியாக , உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்க்கவும்.
          7. எண்ணெய் வெளிவரும் வரை வதக்கவும். கலவையை ஆறவிடவும்.
          8. மிக்ஸியில், வதக்கிய கலவையை சேர்க்கவும்.
          9. சிறிது தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
          10. அரைத்த சட்னியோடு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். 
          தாளிப்பதற்கு 
          1. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
          2. தாளித்ததை சட்னியோடு சேர்த்து பரிமாறவும்.
          1. துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பு அல்லது பாதி துவரம் பருப்பு பாதி கடலை பருப்புயை சேர்த்துக்கொள்ளலாம்.
          2. விருப்பப்பட்டால், புளிப்பிற்க்கு புளியை சேர்த்துக்கொள்ளலாம்.

          வாசகர்களின் விருப்பமான ரெசிபி

          செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

          சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...