Thursday 28 September 2017

காலிஃபிளவர் மஞ்சூரியன் ரெசிபி

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர்  பொரிப்பதற்க்கு

  1. காலிஃபிளவர் - 1
  2. இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  3. சோளம் மாவு - 3 மேஜை கரண்டி
  4. அரிசி மாவு - 2 மேஜை கரண்டி
  5. மைதா - 2 மேஜை கரண்டி
  6. மிளகாய் தூள் - 1/2 மேஜை கரண்டி
  7. உப்பு - 2 தேக்கரண்டி
  8. தயிர் - 2 மேஜை கரண்டி
மஞ்சூரியன் சாஸ் செய்வதற்க்கு
  1. வெங்காயம் - 2
  2. முட்டைக்கோஸ் - 2 மேஜை கரண்டி
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
  4. பச்சை மிளகாய் - 3
  5. தக்காளி சாஸ் - 2 மேஜை கரண்டி
  6. உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை 

  1. வாணலியில்  காலிஃபிளவர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீரை சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  2. வடிகட்டியைப் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டவும். திசு பேப்பர் அல்லது சுத்தமான துணியை கொண்டு அதிகப்படியான தண்ணீரை ஒத்தி எடுக்கவும்.   
  3. 'காலிஃபிளவர்  பொரிப்பதற்க்கு' கீழ் உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. காலிஃபிளவரை தயாரித்து வைத்திருக்கும் கலவையில் தேய்த்து 30 நிமிடங்களாவது  ஊற வைக்கவும்.
  5. இதற்கிடையில் சாஸ் செய்வதற்க்கு தேவையான காய்கறிகளை நறுக்கிக்கொள்ளவும்.
  6. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது , நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் உப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
    மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.வதக்கவ
    இப்போது அதில் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  7. தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  8. ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் தண்ணீரை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
  9. அதனை வாணலியில் இருக்கும் கலவையோடு சேர்க்கவும்.
  10. வாணலியில் என்னை ஊற்றி காலிஃபிளவரை பொரித்து கொள்ளவும்.
  11. பொறித்த காலிஃபிளவரில் உள்ள அதிகப்படியான எண்ணையை திசு பேப்பரில் ஒற்றி எடுக்கவும்.
  12. பொறித்த காலிஃபிளவரை தயாரித்து வைத்துள்ள சாஸில் கலந்து சூடாக பரிமாறவும்.

      No comments:

      Post a Comment

      வாசகர்களின் விருப்பமான ரெசிபி

      செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

      சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...