Showing posts with label kid's recipe. Show all posts
Showing posts with label kid's recipe. Show all posts

Thursday, 17 August 2017

சுவையான-சத்தான ராகி மால்ட் ரெசிபி

 



To Read this Recipe in English, Click Here

தேவையான பொருட்கள்

  1. கேழ்வரகு மாவு / ராகி மாவு  - 1/2 கப்
  2.  தண்ணீர் - 2 கப்
  3.  பால் - 1 1/2 கப்
  4.  சர்க்கரை / வெல்லம்  / பனை வெல்லம் / பனங் கற்கண்டு - தேவையான அளவு 
  5.  ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
  6.  பருப்பு வகைகள் - விருப்பத்திற்கு ஏற்ப 

To Read this Recipe in English, Click Here

செய்முறை 

    1. ஒரு பாத்திரத்தில், பான் வெல்லம் மற்றும் தண்ணீரை சேர்க்கவும்.
    2. பனை வெல்லம் கரையும் வரை சிறு தீயில் காய்ச்சவும்.
    3. பனை வெல்ல பாகை வடிகட்டவும்.
    4. வாணலியில், ராகி மாவை (3-4) நிமிடங்கள் வரை பச்சை வாடை போக வறுக்கவும். 
    5. தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டி இல்லாதவாறு நன்கு கலக்கவும்.
    6. பாலை சேர்க்கவும்.
    7. ராகி மால்ட் சிறிது கெட்டியாகும் வரை சமைக்கவும். இடைவெளி விட்டு கட்டி விழாதவாறு கலக்கவும். 
    8. பனை வெல்ல பாகை சேர்க்கவும்.
    9. ஏலக்காய் துளை சேர்க்கவும்.
    10. ராகி மால்ட்டை நன்கு கலக்கவும்.
    11. விருப்பமான பருப்பு வகைகளை கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

    To Read this Recipe in English, Click Here

    குறிப்பு

    1. ராகி மால்ட் கெட்டியாக இருந்தால் மிதமான சூட்டில் இருக்கும் பாலை சேர்த்து நன்கு கலக்கி உடனடியாக பரிமாறவும். சிறிது நேரம் கலந்து பரிமாறுவதாக இருந்தால், பரிமாறும் முன்பு பாலை சேர்க்கவும்.
    2. குழந்தைகளுக்கு, பொடியாக்கிய  முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு அல்லது அக்ரூட் பருப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
    3. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சாதாரண பாலிற்கு பதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ள பாலை சேர்த்துக்கொள்ளலாம்.
    4. இனிப்புக்காக, நான் பனை வெல்லம் பயன்படுத்தினேன். சர்க்கரை, வெல்லம் அல்லது பனங் கற்கண்டு எதுவேண்டுமானாலும்  பயன்படுத்தப்படலாம்.
    5.  சிறிது இடைவெளிவிட்டு ராகி மால்ட்டை கலகிகொன்டே இருக்க வேண்டும். இல்லையேன்றால் ஆதி பிடித்துவிடும்.
    6. விருப்பப்பட்டால், ராகி மால்ட்டை குளிரவைத்து பரிமாறலாம்.
    7. விருப்பத்திற்கு ஏற்றவாறு ராகி மால்டின் சுவை மற்றும் பதத்தை மாற்றிக்கொள்ளவும். 
            

    வாசகர்களின் விருப்பமான ரெசிபி

    செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

    சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...