To Read this Recipe in English, Click Here
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு / ராகி மாவு - 1/2 கப்
- தண்ணீர் - 2 கப்
- பால் - 1 1/2 கப்
- சர்க்கரை / வெல்லம் / பனை வெல்லம் / பனங் கற்கண்டு - தேவையான அளவு
- ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
- பருப்பு வகைகள் - விருப்பத்திற்கு ஏற்ப
- ஒரு பாத்திரத்தில், பான் வெல்லம் மற்றும் தண்ணீரை சேர்க்கவும்.
- பனை வெல்லம் கரையும் வரை சிறு தீயில் காய்ச்சவும்.
- பனை வெல்ல பாகை வடிகட்டவும்.
- வாணலியில், ராகி மாவை (3-4) நிமிடங்கள் வரை பச்சை வாடை போக வறுக்கவும்.
- தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டி இல்லாதவாறு நன்கு கலக்கவும்.
- பாலை சேர்க்கவும்.
- ராகி மால்ட் சிறிது கெட்டியாகும் வரை சமைக்கவும். இடைவெளி விட்டு கட்டி விழாதவாறு கலக்கவும்.
- பனை வெல்ல பாகை சேர்க்கவும்.
- ஏலக்காய் துளை சேர்க்கவும்.
- ராகி மால்ட்டை நன்கு கலக்கவும்.
- விருப்பமான பருப்பு வகைகளை கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
To Read this Recipe in English, Click Here
குறிப்பு
- ராகி மால்ட் கெட்டியாக இருந்தால் மிதமான சூட்டில் இருக்கும் பாலை சேர்த்து நன்கு கலக்கி உடனடியாக பரிமாறவும். சிறிது நேரம் கலந்து பரிமாறுவதாக இருந்தால், பரிமாறும் முன்பு பாலை சேர்க்கவும்.
- குழந்தைகளுக்கு, பொடியாக்கிய முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு அல்லது அக்ரூட் பருப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சாதாரண பாலிற்கு பதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ள பாலை சேர்த்துக்கொள்ளலாம்.
- இனிப்புக்காக, நான் பனை வெல்லம் பயன்படுத்தினேன். சர்க்கரை, வெல்லம் அல்லது பனங் கற்கண்டு எதுவேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம்.
- சிறிது இடைவெளிவிட்டு ராகி மால்ட்டை கலகிகொன்டே இருக்க வேண்டும். இல்லையேன்றால் ஆதி பிடித்துவிடும்.
- விருப்பப்பட்டால், ராகி மால்ட்டை குளிரவைத்து பரிமாறலாம்.
- விருப்பத்திற்கு ஏற்றவாறு ராகி மால்டின் சுவை மற்றும் பதத்தை மாற்றிக்கொள்ளவும்.
No comments:
Post a Comment