Sunday 3 September 2017

மதுரை பேமஸ் பட்டர் பன்



TO VIEW THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.

தேவையான பொருட்கள்

  1. ஸ்வீட் பன்  - 1
  2. சர்க்கரை - 1/4 கப்
  3. வெண்ணெய் - 25 கிராம்
  4. பால் - 3 மேஜை கரண்டி


TO VIEW THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.

செய்முறை 

  1. சூடான பாலில் வெண்ணையை சேர்க்கவும்.
  2. பால் மற்றும் வெண்ணை ஒன்று சேருமாறு நன்கு கலக்கவும்.
  3. பன் நடுவில், முக்கால் வாசி வரை  வெட்டவும்.   
  4. பன் நடுவில் வெண்ணெய்-பால் கலவை மற்றும் சர்க்கரையை  சேர்க்கவும்.
  5. தோசை கல்லை சூடுபடுத்தி பன்னை அதன் மீது வைக்கவும்.
  6. சிறிது வெண்ணெயை பன் மீது வைக்கவும்.
  7. பன்னை திருப்பி போட்டு அதன் மீது சிறு வெண்ணை துண்டை சேர்க்கவும்.
  8. மீண்டும் பன்னை திருப்பி போட்டு லேசாக கொத்தவும்.
  9. சிறிது சக்கரையை தூவவும். மீண்டும் சிறு வெண்ணை துண்டை பன் மீது வைக்கவும்.
  10. பட்டர் பன் சுவைக்க ரெடி. சூடாக பரிமாறவும்.

TO VIEW THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.

குறிப்பு     

  1. வெண்ணையை சூடான பாலில் கலக்குவதற்கு பதில் உருகிய (சாதாரண வெப்பநிலை)வெண்ணையை பயன்படுத்தலாம்.
  2. மேலும், நான் வெண்ணையை அதிகமாக பயன்படுத்த விரும்பவில்லை எனவே,  சூடான பாலில் வெண்ணையை கலந்து பயன்படுத்தினேன். 

      No comments:

      Post a Comment

      வாசகர்களின் விருப்பமான ரெசிபி

      செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

      சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...