Friday 18 August 2017

பாம்பே சட்னி ரெசிபி


    bombay chutney (17) bombay chutney (15)

    To Read this Recipe in English, Click Here 

    தேவையான பொருட்கள்


    1. சின்ன வெங்காயம் - (4-5)
    2. தக்காளி  - (1-2)
    3. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    4. கறிவேப்பிலை  - 1 
    5. பச்சை மிளகாய் - 1
    6. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    7. சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (தேவைப்பட்டால் )
    8. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
    9. கடலை மாவு - 2 தேக்கரண்டி
    10. கடுகு - 1/2 தேக்கரண்டி
    11. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    12. உப்பு - 2 தேக்கரண்டி
    13. எண்ணெய் - 3 மேஜை கரண்டி 
    1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவோடு தண்ணீரை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். தனியே எடுத்துவைக்கவும்.   bombay chutney (2)
    2. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.  bombay chutney (3)
    3. கடுகு , உளுத்தம் பருப்பு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும். bombay chutney (4)
    4. வெங்காயம் வதங்கியயுடன்  நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.bombay chutney (5)
    5. தேவையான அளவு உப்பை சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.                                                                    bombay chutney (6)
    6. மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தை சேர்க்கவும்.                                bombay chutney (7)
    7. தண்ணிரில் கரைத்து வைத்த கடலை மாவை சேர்க்கவும். சிறு தீயில் 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்.                                 bombay chutney (8)                                     
    8. நறுக்கிய கொத்துமல்லி இலைகளை கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.  bombay chutney (11)

    To Read this Recipe in English, Click Here 

    குறிப்பு

    1. உப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.    
    2. காரம் அதிகம் வேண்டும் என்றால் சிவப்பு மிளகாய் துளை சேர்த்துக்கொள்ளலாம்.
    3. இந்த சட்னி ஆறியதும் கெட்டியாகிவிடும். எனவே, கடலை மாவை கரைக்கும் பொது போதிய அளவு தண்ணீரை ஊற்றவும்  
    4. இல்லையேனில், பரிமாறும் முன் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். 

    No comments:

    Post a Comment

    வாசகர்களின் விருப்பமான ரெசிபி

    செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

    சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...