Wednesday 28 June 2017

முல்லு முருங்கை வடை ரெசிபி


பாங்கராபான் பைரி / முல்லு முருங்கை கீரை வடை ஒரு ருசியான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி. மதுரையில் தள்ளு வண்டி கடையில்  இது ஒரு பிரபலமான சிற்றுண்டி. முள்ளு முருங்கை இலையில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. மெக்னீசியம், இரும்பு, கால்சியம், ஃபைபர் மற்றும்   பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. முல்லு முருங்கையோடு மிளகும் சேர்ந்துள்ளதால் இதில் நிறைய பபலன்கள் உள்ளன. குளிர் மற்றும் இருமலுக்கு இது மருந்தாக இருக்கும்.
மழைக்காலத்தில், முள்ளு முருங்கை வடை இட்லி போடி அல்லது பொட்டு கடலை பொடியோடு சாப்பிட்டால் இதமாக இருக்கும். . கிட்ஸ்இந்த டிஷ் நேசிக்கும். குழந்தைகளும் இந்த வடையை மிகவும் விரும்புவர். இது சௌராஷ்ட்ர மக்களின் ஸ்பெஷல் வடை ஆகும்.

TO VIEW THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.



தேவையான பொருட்கள்

  1. முள்ளு முருங்கை இலை - 2 கப் 
  2. இட்லி அரிசி - 2 கப்
  3. மிளகு - 2 தேக்கரண்டி
  4. கல் உப்பு - 1 தேக்கரண்டி
  5. அரிசி மாவு  - 1/2 கப்
  6. எண்ணெய் - (5-6) டேபிள் ஸ்பூன் 

செய்முறை

  1. இட்லி அரிசியை நன்கு அலசி 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊரவைக்கவும். 
  2. முள்ளு முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்யவும்.
  3. மிக்ஸியில் முள்ளு முருங்கை இலை மற்றும் மிளகை சேர்க்கவும். சிறிது தண்ணீரை சேர்த்து மைய அரைக்கவும்.
  4. அரைத்த கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றவும். 
  5. மிக்ஸியில் ஊறவைத்த அரிசி மற்றும் கல் உப்பை சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  6. அரைத்த வைத்த முள்ளு முருங்கை இலையுடன் அரைத்த இட்லி அரிசியை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
  7. அரிசி மாவை சேர்த்து அரைத்த கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  8. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
  9. நனைத்த இட்லி துணி அல்லது எண்ணெய் தடவிய சுத்தமான பிளாஸ்டிக் கவரை எடுத்துக்கொள்ளவும். சிறிது மாவை எடுத்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.
  10. வட்டமாக அதை கையால் தட்டிக்கொள்ளவும்.
  11. எண்ணெய் சூடானதும் வட்டமாக தட்டிய மாவை கவனமாக பொரிக்கவும்.
  12. மறுபுறமும் நன்றாக பொரிக்கவும். 
  13. இட்லி பொடியுடன் சூடாக பரிமாறவும்.
    1. சுவைக்கு ஏற்ப காரம் மற்றும் உப்பை சரிசெய்யவும்.
    2. சப்பாத்தி மாவை விட இந்த மாவு கொஞ்சம் ஈர பதத்தில் இருக்க வேண்டும்.
    3. முள்ளு முருங்கை இலை மற்றும் இட்லி அரிசியை அரைக்கும் போது தண்ணீரை கொஞ்சமாக ஊற்றவும். இல்லையென்றேல் மாவு எண்ணையை அதிகமாக குடிக்கும்.
    4. அரிசி மாவு முள்ளு முருங்கை இலைமாவை கெட்டியாக பிசைய தேவைப்பட்டால் மட்டும் உபயோகிக்கவும்.

    1 comment:

    வாசகர்களின் விருப்பமான ரெசிபி

    செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

    சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...