Sunday 9 July 2017

கிராமத்து ஸ்பெஷல் மிட்டாய் : கமர்கட்



    கமர்கட் கிராமத்தில் பிரபலமான மிட்டாய் ஆகும் . இது நகரத்திலும் கிடைக்கிறது. ஆடம்பரமான மிட்டாயின் வருகையால்  கமர்கட் உற்பத்தி  குறைந்துள்ளது. கமர்கட்டில் நிறைய சத்துகள் உள்ளது . இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது . இந்த மிட்டாயில் சக்கரை சுத்தமாக சேர்க்கவில்லை.

    இது கடினமாக இருக்கும். நம் பற்களின் வலிமைக்கு இந்த மிட்டாய் ஒரு பரிட்சையாக இருக்கும். படத்துடன் கூடிய  கமர்கட்டின் செய்முறை பின் வருமாறு. 

    To Read this Recipe in English, Click Here 

    தேவையான பொருட்கள்


    1. தேங்காய் (துருவியது ) - ½ கப்
    2. மண்டைவெல்லம் (துருவியது ) - 1 1/2 கப்
    3. ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
    4. நெய் - 2 தேக்கரண்டி

    To Read this Recipe in English, Click Here 

    செய்முறை 

    1. வாணலியில் நெய்யை சூடுபடுத்தவும்.
    2. அதில் துருவிய தேங்காயை சேர்த்து, 1-2 நிமிடம் சிறு தீயில் வறுக்கவும்.
    3. ஒரு தட்டில் வறுத்த தேங்காயை மாற்றிக்கொள்ளவும்.
    4.  அதே வாணலியில், துருவிய வெல்லத்தை சேர்க்கவும்.
    5. சிறிதளவு தண்ணீரை ஊற்றவும்.
    6. மண்டைவெல்லம் கரையும் வரை காய்ச்சவும்.
    7.  மண்டைவெல்ல கரைசலை வடிகட்டவும்.
    8.  வடிகட்டிய மண்டைவெல்ல கரைசலை மறுபடியும் வாணலியில் ஊற்றவும்.      
    9. அதனை கொதிக்கவிடவும்.
    10. மண்டைவெல்ல கரைசல் சிறிது கெட்டியானதும் வறுத்த தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
    11. ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
       
    12. கமர்கட் கலவை மேலும் கெட்டியாகும். சிறு தீயிலே சமைக்கவும் மற்றும் அடிக்கடி கலக்கவும், இல்லையெனில் அடிபிடித்துவிடும்.
    13. கலவையின் நிறம் பொன்னிறத்திலிருந்து அடர்ந்த பிரவுன் நிறத்திற்கு மாறும். 
    14. கெட்டியாகும் வரை காய்ச்சவும்.
    15.  ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். கெட்டியானதும், 1/2 ஸ்பூன் கலவையை தண்ணீரில் சேர்க்கவும். தண்ணீரோடு அது கலக்கக்கூடாது மேலும் கையால் உருட்டினால் கடினமான பந்து போல வரவேண்டும். இது தான் சரியான பதம். பந்து போல் உருட்ட முடியவில்லை என்றால் சிறிது நேரம் காய்ச்சவும். 
    16. ஒரு தட்டில் நெய் தடவிக்கொள்ளவும். கமர்கட் கலவையை தட்டில் ஊற்றவும். சிறிது ஆறியதும் நெய் தடவிய கையில் சிறு பந்துகளாக உருட்டிக்கொள்ளவும். அதிக நேரம் ஆறினால் உருட்ட முடியாது. சூடாக இருக்கும் போதே சீக்கிரமாக உருட்டிக் கொள்ளவேண்டும். 
    17. ஆறியதும் கடினமாக மாறிவிடும். கற்று புகாத டப்பாவில் அடைத்து ஒரு வாரம் வரை சுவைத்து மகிழலாம்.

    To Read this Recipe in English, Click Here 

    குறிப்பு

    1. முழு செய்முறையை சிறு தீயிலே சமைக்கவும். 
    2. தட்டில் நெய் தடவுவது முக்கியம் இல்லை என்றெல் கமர்கட் கலவை தட்டில் ஒட்டிக்கொள்ளும்.
    3. கமர்கட் கலவை சீக்கிரமாகவே கடினமாகிவிடும். 
    4. கலவையை சூடாக்கினால் சிறிது இளகிவிடும். உடனே கமர்கட்டை உருட்டிக்கொள்ளலாம். 
    5. நான் மைக்ரோவே ஓவெனில் வைக்கும் தட்டை உபயோகித்ததால் தட்டை அப்படியே ஓவெனில் வைத்து சூடுபடுத்தினேன். 
    6. கலவை மிகவும் சூடாக இருக்கும்.சூட்டை பொறுக்க கையில் நெய் தடவிக்கொள்ளவும். 

      No comments:

      Post a Comment

      வாசகர்களின் விருப்பமான ரெசிபி

      செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

      சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...