To Read this Recipe in English, Click Here
தேவையான பொருட்கள்பேபி கார்ன் 65க்கு
- பேபி கார்ன் - 8 துண்டுகள்
- சோள மாவு - (3-4) டேபிள் ஸ்பூன்
- மைதா - 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- எலுமிச்சை - 1/2
மிளகு வருவலுக்கு
- வெங்காயம் (பெரியது) - 1
- கறிவேப்பிலை - 2
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - சிறிது (தேவைப்பட்டால்)
- பேபி கார்னை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- அகலமான கிண்ணத்தில், சோள மாவு, மைதா, அரிசி மாவு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி அடர்த்தியான கலவையாக கலக்கி கொள்ளவும்.
- நறுக்கிய பேபி கார்னை மாவு கலவையில் சேர்த்து கலக்கவும். 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- பேபி கார்ன் துண்டுகளை நன்கு பொரிக்கவும்.
- பொரித்த பேபி கார்ன் துண்டுகளை கவனமாக எண்ணெயிலிருந்து எடுக்கவும்.
- அதிக எண்ணெய்யை திசு பேப்பரில் எடுக்கவும்.
- அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலையை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்க்கவும். 2 நிமிடங்கள் வரை வதக்கவும்.
- பொரித்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
- சிற்றுண்டியாகவோ அல்லது சாதத்துடனோ சூடாக பரிமாறவும்.
- விருப்பப்பட்டால், வெங்காய தாள் அல்லது குடை மிளகாய் வெங்காயத்தோடு சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.
- சைனீஸ் சுவைக்கு சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
- பேபி கார்ன் பொரிக்க தயாரித்த கலவையில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்தால் சுவை கூடும்.
- எலுமிச்சைக்கு பதிலாக தயிரை சேர்த்து கொள்ளலாம்.
- உப்பு மற்றும் காரத்தை சுவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும்.
No comments:
Post a Comment